திடீரென தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட காரணம் என்ன தெரியுமா?

By Karthick M
22 May 2025, 02:31 IST

தோலில் அரிப்பு என்பது பெரும் பிரச்சனையாகும். கூட்டத்தில் இருக்கும் போதும் தூங்கும் போதும் திடீரென ஒரே இடத்தில் அதிகமாக அரிப்பு ஏற்படும்.

வெக்கை நேரத்தில் அதிக அரிப்பு ஏற்படும். ரசாயன அடிப்படையிலான தோல் தயாரிப்புகளான பவுடர்கள், மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவதாலும் அரிப்பு பிரச்சனை ஏற்படலாம்.

அரிக்கும் தோல் அழற்சியானது அடோபிக் டெர்மடிடிஸ் என கூறப்படுகிறது. தலை முதல் கால் வரை நமைச்சல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.

கற்றாழை ஜெல் சருமத்திற்கான பல பலன்களை கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து வறட்சியை குறைக்கிறது.

அரிப்பு உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம், ஐசிங் செய்ய ஒரு நல்ல துணியில் ஐஸ் கட்டி வைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும்.

தேங்காய் எண்ணெயும் அரிப்புகளைப் போக்க சிறந்த வழியாகும். தேங்காய் எண்ணெய் எந்த எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது.