சொல்லப்போனால் எண்ணெய் பசை பிரச்சனையால் தான் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். கோடை காலத்தில் இந்த பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
சோயா பவுடர் தடவவும்
எண்ணெய் பசைக்கு சோயா பவுடர் பயன்படுத்தலாம். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.
உளுந்து மாவு பேஸ்ட்
உளுந்து மாவு எண்ணெய் சருமத்திற்கு மிக நன்மை பயக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் உளுந்து மாவைப் பயன்படுத்தலாம்.
அலோ வேரா ஜெல்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் கற்றாழையை முகத்தில் தடவலாம். முகப்பரு, எண்ணெய் சரும பிரச்சனை வராமல் தடுக்க கற்றாழையைப் பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முல்தானி மிட்டி சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது.
இவை அனைத்தும் எண்ணெய் பசை சரும பிரச்சனையை போக்க உதவும் என்றாலும் தோலில் ஏதும் தீவிர பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்.