தீபாவளிக்கு ஸ்கின் கலரையே பளீச்சின்னு மாத்த... இந்த ஒரு பழம் போதும்!
By Kanimozhi Pannerselvam
28 Oct 2024, 10:09 IST
பப்பாளி
பப்பாளி பழத்தை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக டல்லான சருமத்தையும் டாலடிக்கும் சருமமாக மாற்ற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு வீட்டிலேயே பப்பாளியை வைத்து ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
பப்பாளியின் சிறப்புப் பண்புகள்
இது முகத்தை ஈரப்பதமாக்குகிறது. இதனை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
நன்றாக மசித்த பப்பாளி ஒரு கப், சில துண்டு வெள்ளரிக்காய், வைட்டமின் ஈ ஆயில்.
பளபளப்பான சருமம் பெற
முதலில் பப்பாளியை நன்றாக மசிக்கவும். இப்போது அதில் துருவிய வெள்ளரிக்காய் சேர்க்கவும். பின்னர் அதில் சில துளிகள் வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெய் சேர்க்கவும். அதை நன்றாக பேஸ்ட் செய்யவும்.
அப்ளே செய்வது எப்படி?
இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். பின்னர் லேசான கைகளால் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரம் இருமுறை இதைச் செய்யலாம்.
இது முகத்தில் உள்ள பருக்கள் பிரச்சனையை போக்குகிறது. வறண்ட சருமத்தை நீக்கி முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
தீபாவளியன்று உங்கள் முகத்தை அழகாக்க, சருமத்தை பொலிவாக்க பப்பாளி பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது.
பப்பாளியை முகத்தில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதில் காணப்படும்