மாம்பழம் முகப்பருவை உண்டாக்குமா?
கோடையில் அனைவரும் மாம்பழத்தை விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். முக்கனிகளில் ஒன்றான இது மிகுந்த சுவையுடையது. இதை சாப்பிட்ட பின் முகப்பரு வரத் தொடங்குகிறது. இதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.
வீட்டு வைத்தியம்
மாம்பழத்தால் ஏற்படும் முகப்பரு பிரச்சனையை தடுக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். இரசாயனங்கள் அடங்கிய விலையுயர்ந்த தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.
மாம்பழத்தை சிறிய அளவில் சாப்பிட வேண்டும்
மாம்பழத்தை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். இந்த பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ் உள்ளது. இது தோல் பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கிறது.
வியர்வை மற்றும் எண்ணெய் சரும பிரச்சனை
கோடையில் வியர்வை வருவது சகஜம். இந்த வியர்வை தோலில் சேரும் போது துளைகள் அடைத்து விடும். எனவே உங்கள் முகத்தை வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். சர்க்கரை அல்லது காபி தூள் கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்.
ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்
முகப்பரு பிரச்சனையை தவிர்க்க ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம். இதற்கு ஐஸ் க்யூப்பை பருத்து துணியில் கட்டி பருக்கள் மீது மசாஜ் செய்யவும். பருக்கள் நீங்கும்.
தேன் நன்மை தரும்
தேன் பல சரும பிரச்சனைகளை நீக்குகிறது. இது ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தில் உள்ள தொற்றுநோய்களை அகற்ற உதவுகிறது.
அலோ வேரா நன்மைகள்
கற்றாழையின் உதவியுடன் முகப்பருக்களை போக்கலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை பருக்கள் மீது தடவினால் நோய்த் தொற்று குறைந்து சருமம் பளபளப்பாக மாறும்.