கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கா.? அதுக்குள்ள ஜொலிக்க இத மட்டும் குடிங்க.!

By Ishvarya Gurumurthy G
23 Feb 2024, 23:24 IST

திருமணத்தின் போது மேடையில் ஜொலிக்க வேண்டுமா? அப்போ திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்து குடிக்க வேண்டிய பானங்கள் இங்கே. ட்ரை பண்ணவும்.

இளநீர்

இளநீர் குடிப்பதால் நீர்ச்சத்து அதிகரிக்கும். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

கிரீன் டீ

கிரீன் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது. மேலும், சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் கிரீன் டீ பருகலாம்.

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ பால்

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ கலந்த பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனைக் குடிப்பதன் மூலம் சருமம் பளபளப்பாக இருப்பதோடு, கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் பிரச்சனையும் நீங்குகிறது.

தாமரை விதை பால்

தாமரை விதை பால் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதனை குடிப்பதால் சருமம் பொலிவுடன் இருப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் பலப்படும்.

ஆரஞ்சு ஜூஸ்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரஞ்சு ஜூஸ் உதவுகிறது. இதனைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் பளபளக்கும்.

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதைக் குடிப்பதால், உடல் எடை குறைவதோடு, சருமமும் பளபளப்பாகும்.