சுரைக்காய் சாறு மற்ற சாறுகளைப் போல சுவையாகவோ, இனிமையாகவோ இருக்காது. எனினும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது
பளபளப்பாக வைக்க
சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு இயற்கையாகவே பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது
மாசற்ற சருமத்தைப் பெற
சுரைக்காய் சாறு இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக மாற்ற உதவுகிறது
வீக்கத்தைக் குறைக்க
சுரைக்காய் சாறு குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கண்களின் கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
முகப்பருவைக் குறைக்க
சுரைக்காய் சாற்றைத் தொடர்ந்து குடிப்பது இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் முகப்பரு பிரச்சனையில் இருந்து படிப்படியாக நிவாரணம் தருகிறது
சுரைக்காய் சாற்றைத் தொடர்ந்து குடிப்பது சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது. சுரைக்காய் சாற்றை வேறு சாற்றுடன் சேர்த்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்