வின்டரில் சருமம் ஜொலிக்க இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
19 Dec 2024, 19:41 IST

குளிர்ந்த காலநிலையில் வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக, சருமம் வறட்சியடைந்து மந்தமாகிகாணப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான நிறத்தை பராமரிக்க சில குளிர்கால சப்ளிமெண்ட்ஸ்களை வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்

பயோட்டின்

சருமம், முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயோட்டின் உதவுகிறது. இது சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இது வறட்சி மற்றும் ஈரப்பத இழப்பைத் தடுக்கவும் உதவுகிறது

வைட்டமின் சி

இது கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாததாகும். இவை சருமத்தை பிரகாசமாக வைக்கவும், சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இந்த வைட்டமின் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைத் தருகிறது

கொலாஜன்

கொலாஜன் சப்ளிமெண்டிஸ் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கக் கூடியதாகும். இது நேர்த்தியான கோடுகளைத் தடுக்க உதவுகிறது. இது கடுமையான குளிர்கால சூழ்நிலையிலும், சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் வைக்க வழிவகுக்கிறது

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஆளிவிதை எண்ணெய் அல்லது மீன் எண்ணெய் போன்ற சப்ளிமெண்ட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை உள்ளே இருந்து நீரேற்றமாக வைப்பதுடன், சரும வறட்சியைக் குறைத்து மிருதுவான மற்றும் பளபளப்பான நிறத்தைத் தருகிறது