அழகான முகத்தில் கரும்புள்ளியா?... எளிய வீட்டுவைத்தியங்கள் இதோ!
By Kanimozhi Pannerselvam
05 Mar 2024, 09:44 IST
மஞ்சள் + கடலை மாவு
மஞ்சள், கடலை மாவை கரைத்து பூசுவது முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் கருமை நீங்க உதவும். நீங்கள் இதை தினமும் பயன்படுத்தலாம் அல்லது வாரத்தில் 3 நாட்கள் பயன்படுத்தலாம்.
சந்தனம்+எலுமிச்சை+ தயிர்
சந்தனம், தயிர் கோடை காலத்தில் சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. சந்தனபொடியை தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகம், மற்றும் கழுத்து பகுதியிலும் தடவி கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ப்ளீச்சிங் செய்ய உதவும்.
கற்றாழை முகத்தை பிரகாசமாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை தினமும் 20 நிமிடம் தடவி வந்தால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பாதாம் எண்ணெயை தினமும் பயன்படுத்தலாம். முகத்தின் பொலிவை மீட்டெடுக்க இந்த முறை சிறந்ததாக கருதப்படுகிறது. கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.
முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி முகத்தில் தோன்றும் கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்கு உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஓரளவு மறைந்துவிடும். முகத்தில் இயற்கையான பொலிவைப் பெற இதை தினமும் பயன்படுத்தலாம்.