வின்டரில் சரும பராமரிப்புக்கு இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
22 Dec 2024, 21:46 IST

குளிர்காலத்தில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் சரும பிரச்சனைகளும் அடங்கும். குளிர்கால சரும பிரச்சனைகளை நீக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைக் காணலாம்

தேங்காய் எண்ணெய்

இது கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இவை சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. குறிப்பாக, வறண்ட குளிர்கால சருமத்திற்கு இது சிறந்த தேர்வாகும். மேலும், இது சருமத்தைப் பாதுகாக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

பாதாம் எண்ணெய்

இந்த எண்ணெயில் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளது. இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது சரும வறட்சியைத் தடுத்து மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. குறிப்பாக, இது உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஆர்கான் எண்ணெய்

இது வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால் நிறைந்ததாகும். ஆர்கன் எண்ணெய் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது குளிர்ச்சியான காலநிலையில் வறட்சியைத் தடுக்கிறது

ரோஸ்ஷிப் எண்ணெய்

ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது சரும சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. மேலும், சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக, கடுமையான குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

அவகேடோ எண்ணெய்

இதில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தைத் தருவதுடன், ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும், இது சருமத்தை பழுதுபார்க்க அவசியமானதாகும்

ஜொஜோபா எண்ணெய்

சருமத்தால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எண்ணெய்களைப் போலவே, ஜோஜோபா எண்ணெயும் எளிதில் உறிஞ்சப்படக் கூடியதாகும். இது சருமத்தை நீரேற்றம் செய்ய உதவுகிறது

ஆலிவ் ஆயில்

இது அதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்திற்கு நன்கு அறியப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தை பழுதுபார்ப்பதை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இது குளிர்கால சரும பராமரிப்புக்கு ஏற்றதாக அமைகிறது