எப்பொவும் இளமையா ஜொலிக்கணுமா? அதுக்கு இந்த ஆயில் தான் பெஸ்ட்

By Gowthami Subramani
29 Jan 2024, 05:12 IST

இயற்கையாகவே முதுமை அறிகுறிகளைக் குறைக்க சில வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றே வயதான எதிர்ப்பு எண்ணெய்கள் பயன்படுத்துவதாகும்

திராட்சை விதை எண்ணெய்

திராட்சை விதை எண்ணெயில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் சரும சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இது வயதான அறிகுறிகளைக் குறைப்பதுடன் கொலாஜனை அதிகரிக்கிறது

ஜோஜோபா எண்ணெய்

இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தின் வயதான அறிகுறிகளை மெதுவாக்கி, நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த உதவுகிறது

தேங்காய் எண்ணெய்

இவை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதுடன், கொலாஜனை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்துவதுடன், செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது

ஆர்கான் எண்ணெய்

இதில் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இவை சருமத்தின் முதுமை எதிர்ப்புத் தன்மையைக் குறைப்பதுடன், நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கிறது

தேயிலை எண்ணெய்

இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சிவந்த மற்றும் வீக்கமடைந்த சருமத்தை ஆற்ற உதவுகிறது. இதன் ஊட்டமளிக்கும் பண்புகளால் சருமம் இளமையாக இருக்க உதவுகிறது

இவை அனைத்தும் முதுமை அறிகுறிகளைக் குறைக்க உதவும் சிறந்த எண்ணெய்களாகும். எனினும், ஒவ்வாமை போன்ற சரும பிரச்சனைகளைத் தவிர்க்க முதலில் பேட்ச் டெஸ் செய்வது நல்லது