மஞ்சள் நீரை கொண்டு முகம் கழுவினால் எவ்வளவு நல்லது தெரியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம் வாருங்கள்..
மஞ்சளின் பன்புகள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின் சி மற்றும் பி6 பண்புகள் உள்ளன.
வறட்சி நீங்கும்
சரும வறட்சியை நீக்க மஞ்சள் கலந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த நீரால் சருமம் இயற்கையாகவே ஈரப்பதமடைகிறது.
முகப்பருவை குணப்படுத்தும்
மஞ்சள் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு பிரச்னையில் இருந்து விடுபடலாம். இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
அரிப்பு குணமாகும்
முக அரிப்பு மற்றும் எரியும் உணர்வைக் குணப்படுத்த, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மஞ்சள் நீரில் முகத்தைக் கழுவலாம்.
எண்ணெய் பசை நீங்கும்
எண்ணெய் பசை சரும பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால், மஞ்சள் நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில் தேங்கியுள்ள கூடுதல் எண்ணெயை நீக்குகிறது.
பிரகாசிக்கும்
உங்கள் முகத்திற்கு இயற்கையான பொலிவைக் கொண்டு வர, உங்கள் முகத்தை மஞ்சள் நீரில் கழுவலாம். இது முகத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்குகிறது.