தூங்கும் முன் முகம் கழுவலாமா?
தூசி, மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் முகம் பாதிக்கப்படுகிறது. இரவில் தூங்கும் முன் முகத்தை கழுவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
பருக்கள் குறையும்
இரவில் தூங்கும் முன் உங்கள் முகத்தை கழுவுவது சருமத்தின் ஆழமான துளைகளை சுத்தம் செய்ய உதவும். சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து முகப்பரு பிரச்சனையை குறைக்க முடியும்.
வயதான எதிர்ப்பு பண்புகள்
தூங்கும் முன் முகத்தை கழுவினால், சிறு வயதிலேயே சருமம் முதுமை அடைவதை தடுக்கலாம். இது முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
தோல் பளபளப்பு
தூங்கும் முன் முகத்தை கழுவுவது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. அதோடு சருமத்தை ஈரப்பதமாக்கி வறட்சியை குறைக்க உதவும்.
இறந்த செல்களை அகற்றும்
தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தை கழுவினால், சருமத்தில் தேங்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் இறந்த சருமம் நீக்கப்படும். இது சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முகம் கழுவுவது எப்படி?
உங்கள் முகத்தை கழுவ வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும். பின் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவவும். இது முக அழுக்குகளை போக்கி பளபளப்பாக்க உதவுகிறது.