சரும பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ சிறந்த நன்மைகளைத் தருகிறது. வைட்டமின் ஈ ஒரு வைட்டமின் மட்டுமல்ல. இது ஆக்ஸிஜனேற்ற நன்மைகளைக் கொண்ட கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் குழுவாகும். இதில் சருமத்திற்கு வைட்டமின் ஈ தரும் நன்மைகளைக் காணலாம்
ஈரப்பதமாக்க
சருமத்திற்கு வைட்டமின் ஈ ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராகச் செயல்படுகிறது. இது சருமம் வறட்சியடைவதைத் தடுத்து, நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது
அரிப்பை நீக்க
முகத்தில் வைட்டமின் ஈ பயன்படுத்துவதால் சருமத்தில் அரிப்புகளை ஏற்படுத்தும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்காது. எனினும், நீரிழப்பு சருமத்தால் ஏற்படும் அரிப்பிலிருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்க உதவுகிறது
தழும்புகளைக் குறைக்க
வைட்டமின் ஈ-ல் உள்ள சிறந்த நன்மைகளில் ஒன்று அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளாகும். இவை முகத்தில் உள்ள தழும்புகளை ஒளிரச் செய்து அழுக்கு மற்றும் தூசியை நீக்குகிறது
காயங்கள் குணமாக
வைட்டமின் ஈ-ன் மிகச்சிறந்த நன்மைகளில் ஒன்று காயங்களைக் குணப்படுத்துவதாகும். ஏனெனில், இது காயங்களை மிகவும் திறம்பட குணப்படுத்த உதவுகிறது
முதுமை அறிகுறிகளைத் தடுக்க
வைட்டமின் ஈ-ல் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இவை சருமத்தின் உறுதி மற்றும் கட்டமைப்பைப் பராமரிக்க உதவுகிறது