சம்மரில் ஸ்கின் பளபளப்பா இருக்க இந்த ஒரு ஃபேஸ் பேக் போதும்

By Gowthami Subramani
18 Apr 2025, 21:57 IST

கோடை வெப்பத்தில் எரிதல், மந்தமான சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் உப்டான் என்ற ஒரு பழங்கால இயற்கையான அழகு பராமரிப்பு முறையைத் தேர்வு செய்யலாம். இவை சருமத்தை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைக்கிறது

கோடையில் உப்டான்

உப்டான் என்பது கடலை மாவு, மஞ்சள் மற்றும் பல மூலிகைகள் கலவையிலிருந்து தயாரிக்கப்படக்கூடியதாகும். இவை சருமத்திற்கு மகத்தான நன்மைகளை அளிக்கிறது. இதில் கோடை வெப்பத்தில் உப்டான் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

வெயிலில் இருந்து பாதுகாப்பு

உப்டானில் உள்ள மஞ்சள் மற்றும் சந்தனம் போன்றவை சருமத்திற்கு குளிர்ச்சியூட்டும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வெயிலின் தாக்கத்தைக் குணப்படுத்துவதுடன், சிவத்தல் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது

சருமத்தை சுத்தம் செய்வது

உப்டான் ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக அமைகிறது. இது அழுக்கு, இறந்த சரும செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இது தவிர, உப்டான் மென்மையான, பளபளப்பைத் தருகிறது

சருமத்தின் அமைப்பை மேம்படுத்த

சருமத்திற்கு உப்டானை தொடர்ந்து பயன்படுத்துவது, சருமத்தின் துளைகளை இறுக்கி, மென்மையாக மற்றும் தெளிவாக வைக்கிறது. இது சரும அமைப்பை மேம்படுத்துகிறது. இதில் உள்ள இயற்கையான கூறுகள், சருமத்தை நெகிழ்வானதாக மாற்றி, இளமையாக வைத்திருக்கிறது

எண்ணெய் பசை சருமத்தை போக்க

வெப்பம் பெரும்பாலும் சருமத்தை எண்ணெய் பசையுள்ளதாக மாற்றலாம். ஆனால், உப்டானின் உறிஞ்சக்கூடிய பொருட்கள், கடலை மாவு போன்றவை சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச உதவுகிறது. இது சருமத் துளைகள் அடைபடுவதைத் தவிர்த்து, முகப்பருவைத் தடுக்கிறது

சருமத்தின் துர்நாற்றத்தைக் குறைக்க

உப்டானில் உள்ள வேம்பு மற்றும் ரோஸ் வாட்டர் போன்ற மூலிகைப் பொருட்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இவை உடல் துர்நாற்றத்தைத் தடுக்கிறது. இது சருமத்திற்கு மென்மையான இயற்கையான டியோடரண்ட் ஆக செயல்பட்டு கோடையில் வியர்வை நாற்றத்தை நீக்க உதவுகிறது