வெங்காயத்தாள் சாப்பிடுவது சருமத்திற்கு இவ்வளவு நல்லதா?

By Gowthami Subramani
28 Jan 2025, 17:06 IST

சருமத்தை இயற்கையாக பளபளப்பாக்க பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக, நாம் உண்ணும் சில உணவுப்பொருள்களும் சருமத்திற்கு நன்மை தருகிறது. அவ்வாறே, அன்றாட உணவில் சேர்க்கும் வெங்காயத் தாள் சருமபொலிவை அதிகரிக்க உதவுகிறது

வெங்காயத்தாள்

இது அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். ஸ்ப்ரிங் ஆனியன் சாதாரண வெங்காயத்தைப் போல சுவையில் வலுவானதாக இல்லையெனினும், உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் பளபளப்பான சருமத்திற்கு வெங்காயத்தாள் தரும் நன்மைகளைக் காணலாம்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் சல்பர் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த கலவைகள் இதில் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது சரும செல்களை பராமரிக்கவும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது

மென்மையான சருமத்திற்கு

இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி தொடர்பான வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும், மென்மையான சருமத்திற்கும் வழிவகுக்கிறது

முகப்பருவை நீக்க

வெங்காயத் தாளில் உள்ள சல்பர் போன்ற கலவைகள் முகப்பருக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தை தெளிவாக வைக்க உதவுகிறது

சுருக்கங்களைக் குறைக்க

இது வைட்டமின் சி-ன் நல்ல மூலமாகும். இவை சருமத்தில் கொலாஜன் தொகுப்பை அதிகரித்து சருமத்திற்குக் கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்குகிறது. மேலும் இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது

புத்துணர்ச்சியான சருமத்திற்கு

இதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதில் உள்ள அதிக நீர் உள்ளடக்கம் ஆகும். இது சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக வைக்கவும், அதன் நெகிழ்ச்சித்தன்மை மேம்படுத்தி புத்துணர்ச்சியைத் தரவும் உதவுகிறது