பால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சருமத்திற்கு பச்சைப்பாலை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்
சருமத்தை ஈரப்பதமாக்க
பச்சைப்பால் சிறந்த மாய்ஸ்சரைசராகும். இது சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், வறட்சியைத் தடுக்கிறது. குறிப்பாக வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது
இயற்கை சுத்தப்படுத்தியாக
பச்சைப்பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது இறந்த செல்கள், அழுக்குகள் அசுத்தங்களை சருமத்திலிருந்து வெளியேற்றி, இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது
பிரகாசமாக வைக்க
இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும், சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைத்து பளபளப்பான நிறத்தை பெற உதவுகிறது
முதுமை எதிர்ப்பு பண்புகள்
பச்சை பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை இளமையாக வைப்பதுடன் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் போன்ற முதுமை அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
எரிச்சலைத் தணிக்க
பச்சைப்பாலில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை எரிச்சல் அல்லது வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. சருமம் எரிச்சல், சிவத்தல் போன்ற நிலைமைகளுக்கு இது ஒரு எளிமையான தீர்வாகும்