இரவு தூங்கும் முன்பு பாதத்தில் மசாஜ் செய்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் இரவு தூங்கும் முன் பாதத்தில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைக் காண்போம்
ஆரோக்கியமான பாதங்களுக்கு
பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் தசைகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இது கால்களில் ஏதேனும் புண்கள், கீறல்கள், வெடிப்புகள் போன்ற பிரச்சனைகள் இருப்பின் அதைக் கண்டறிய வாய்ப்பாக அமைகிறது
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
பாதங்களில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு சிறந்ததாகும். எனவே படுக்கைக்கு முன் 10-20 நிமிடம் மசாஜ் செய்யும் போது அது சுழற்சியை கணிசமாக மேம்படுத்துகிறது
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
மசாஜ் செய்யும் போது நரம்பு மண்டலம் அமைதிப்படுத்தப்பட்டு, இரத்த அழுத்தத்தை பாதிக்கக்கூடிய பாதுகாப்பு மற்றும் தளர்வு உணர்வை வளர்க்கிறது
மன அமைதி
பாத மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி மூளையில் நல்ல எண்டோர்பின்களை அதிகரிக்கிறது. இவை மன அமைதியை மேம்படுத்துகின்றன
தூக்கத்தை மேம்படுத்த
கால் மசாஜ் நல்ல எண்டோர்பின்களை ஊக்குவிப்பதாகவும், சிறந்த தூக்கம் மற்றும் தளர்வை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாத மசாஜ் மனச்சோர்வைக் குறைக்கிறது
எடிமாவைக் குறைக்க
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் மற்றும் கணுக்கால் வீக்கத்தை போக்க பாத மசாஜ் பெரிதும் உதவுகிறது