சருமம், முடியில் இந்த ஒரு எண்ணெய் நிகழ்த்தும் அற்புதங்கள்!

By Kanimozhi Pannerselvam
27 Mar 2025, 14:39 IST

ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது

ஜோஜோபா ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சரும துளைகளில் பாக்டீரியாக்கள் படிவதைத் தடுப்பதன் மூலம் பாக்டீரியா தொற்று மற்றும் முகப்பருவையும் தடுக்கிறது.

நேச்சுரல் ஃபேஷ் வாஸ்

சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் மாசுகளை அகற்ற ஜோஜோபா ஆயில் உதவும். முகத்தில் சில துளிகள் ஜோஜோபா எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் கொடுத்தால் சுத்தமான, மென்மையான சருமத்தை பெறலாம்.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

ஜோஜோபா எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்திற்கு இயற்கையான ஆக்ஸினேற்றியாக செயல்பட்டு, சருமத்தை மென்மையாக்கும்.

இயற்கையான கன்டிஷனர்

ஜோஜோபா எண்ணெய் முடிக்கு ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர், இது முடி மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்க உதவுகிறது.

முடி உதிர்தலைக் குறைக்கிறது

ஜோஜோபா எண்ணெய் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும், முடி அடர்த்தியாக வளர்வதை ஊக்குவிக்கவும் உதவும்.

உச்சந்தலை வறட்சி

ஜோஜோபா எண்ணெய் வறண்ட, அரிப்பு உச்சந்தலையை ஆற்றவும் ஈரப்பதமாக்கவும் உதவும்.