உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? அப்போ வீட்டில் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் வைத்திருக்க வேண்டும். இதன் நன்மைகள் இங்கே.
வறட்சியை தடுக்கும்
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. இதனால் சருமம் வறட்சியடையாது.
சுருக்கங்கள் நீங்கும்
இன்றைய காலத்தில் இளமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் வருகிறது. இதனை தடுக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
இறந்த செல்களை அகற்றும்
சருமத்தில் உள்ள இறந்த செல்லை அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. மேலும் இது சருமத்தை பொலிவாக்குகிறது.
எரிச்சல் இருக்காது
உணர்திறன் சருமம் உள்ளவர்களுக்கு சரும எரிச்சல் ஏற்படுவது இயல்பு. இதனை தடுக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
கருமை நீங்கும்
நம் முகத்தில் உள்ள கரும்புள்ளி, கண்களை சுற்றியுள்ள கருவளையம், கை மற்றும் கால் முட்டி பகுதியில் உள்ள கருமை போன்றவற்றை நீக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.