தேங்காய் எண்ணெயின் சில பண்புகள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக இதை காலில் தடவுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கால் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க தேங்காய் எண்ணெயில் மசாஜ் செய்யலாம். இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
குதிங்கால் வெடிப்பு பிரச்சனைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் பண்புகள் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
உடலின் மற்ற பாகங்களை விட கால்கள் அதிகம் வேலை செய்கின்றன. இவை அடிக்கடி தொற்றுக்கு ஆளாகின்றன. தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதை சரிசெய்ய உதவும்.
காலணியுடன் நடக்கும் போது, பாதங்களில் கொப்புளங்கள் தோன்றி சருமம் வறண்டு போகலாம். இதிலிருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.
தேங்காய் எண்ணெயின் பல்வேறு பண்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.