பொலிவான சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெய் தரும் சூப்பர் நன்மைகள் இதோ

By Gowthami Subramani
15 Jun 2025, 21:21 IST

கருஞ்சீரக எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, கருஞ்சீரக எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதில் சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

கருஞ்சீரக விதைகளில் தைமோ ஹைட்ரோகுவினோன் மற்றும் தைமோ குயினோன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை தழும்புகள் மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது

உலர்ந்த சருமத்தை அகற்ற

சிலருக்கு சருமம் மிகவும் வறண்டு போகும் நிலை உண்டாகலாம். எனவே சருமம் மிகவும் வறண்டு இருப்பின், சருமத்தில் கருஞ்சீரக எண்ணெயைத் தடவலாம்

மென்மையான சருமத்திற்கு

சருமத்தை மென்மையாக மாற்ற விரும்புபவர்கள் கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன் மென்மையாகவும் வைக்க உதவுகிறது

தோலழற்சி நீங்க

அரிக்கும் தோலழற்சி காரணமாக வீக்கம், அரிப்பு மற்றும் திட்டுகள் போன்றவை ஏற்படலாம். இந்நிலையில் சருமத்தில் கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் சில நாள்களில் பலன்களைப் பெறலாம்

முகப்பரு பிரச்சனை நீங்க

கருஞ்சீரக விதைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை நீக்க உதவுகிறது. இந்த எண்ணெயை முகத்தில் தடவுவதன் மூலம் சரும பொலிவைப் பெறலாம்

பயன்படுத்தும் முறை

வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெயைக் கலந்து முகத்தைக் கழுவ பயன்படுத்தலாம். மேலும் இந்த விதைகளை தேனுடன் கலந்து முகத்தில் தடவி வர நல்ல பலனைப் பெற முடியும்

இவ்வாறு சருமத்திற்கு கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்