பல்வேறு காரணிகளால் சருமம் வறண்ட நிலையில் காணப்படலாம். இந்த வறண்ட சருமத்திலிருந்து விடுபட இனிமையான மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகள் நிறைந்த கற்றாழையைப் பயன்படுத்தலாம். இதில் வறண்ட சருமத்திலிருந்து விடுபட கற்றாழை எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
ஈரப்பதமான சருமத்திற்கு
கற்றாழை ஜெல் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்பட்டு, வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்திற்குக் கற்றாழையைப் பயன்படுத்துவது நாள் முழுவதும் நீடித்த நீரேற்றத்தைத் தருகிறது
வெயிலின் தாக்கத்தை நீக்க
அதிக வெயிலின் காரணமாக, சருமம் சிவந்து, வறண்டு, கரடுமுரடாக இருக்கும். இந்நிலையில் வறண்ட சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவது அதன் குளிர்ச்சியான, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சிஎதிர்ப்புப் பண்புகள் சருமத்தை ஆற்றுகிறது
காயங்களை ஆற்றுவதற்கு
வறண்ட சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவது சிராய்ப்புகள், சிறிய வெட்டுகள் மற்றும் இன்னும் பிற காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. இது தோல் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கவும், காயங்களை விரைவாக மூடவும் உதவுகிறது
முதுமை அறிகுறிகளைக் குறைக்க
வறண்ட மந்தமான சருமத்தின் காரணமாக சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் போன்ற முதுமை அறிகுறிகள் தோன்றலாம். இந்நிலையில் கற்றாழையில் உள்ள முதுமை எதிர்ப்புப் பண்புகள், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது
முகப்பருவை நீக்க
வறண்ட சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவது முகப்பரு அல்லது தழும்புகளைப் போக்க உதவுகிறது. இதற்கு கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளே காரணமாகும். இந்த பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்த மற்றும் சிவத்தலைக் குறைக்க உதவுகிறது
குறிப்பு
வறண்ட சருமத்திற்கு கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, சருமத்தில் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளைத் தவிர்க்க எப்போது ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது