பளீச்சென்ற முகத்துக்கு ஆப்பிள் விதை எண்ணெய் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
27 Jan 2025, 08:13 IST

சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க ஆப்பிள் விதை எண்ணெய் பெரிதும் உதவுகிறது. இதில் சருமத்திற்கு ஆப்பிள் விதை எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

ஆப்பிள் விதைகளில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது

நீரேற்றமாக வைக்க

ஆப்பிள் விதை எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் சருமம் பளபளப்பாக இருப்பதை உணரலாம்

மென்மையான சருமத்திற்கு

ஆப்பிள் விதை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது

முகப்பரு நீங்க

இந்த விதை எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது முகப்பரு தொடர்பான பிரச்சனையை நீக்க உதவுகிறது

கொலாஜன் உற்பத்திக்கு

சருமத்தில் கொலாஜன் போன்ற புரத உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் விதை எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை இளமையாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

முகச்சுருக்கங்கள் நீங்க

ஆப்பிள் விதை எண்ணெயை சருமத்திற்குத் தடவுவதன் மூலம் அதில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் பிரச்சனையைக் குறைக்கிறது. இதற்கு காரணம் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுப்பதே ஆகும்

எப்போது பயன்படுத்தலாம்?

ஆப்பிள் எண்ணெயை முகத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு இரவு தூங்கும் முன் ஆப்பிள் விதை எண்ணெயை சருமத்தில் தடவலாம். எனினும் சருமத்திற்கு புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது