மினுமினுக்கும் சருமத்தைப் பெற இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
24 Apr 2024, 18:23 IST

சமையல் பயன்பாட்டுக்காக நீண்ட காலமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்பு வழக்கத்தில் தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பதன் நன்மைகளைக் காணலாம்

வீக்கத்தைக் குறைக்க

தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அரிக்கும் தோலழற்சி அல்லது தடிப்புத் தோலழற்சி போன்ற உணர்திறன் மிகுந்த சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஈரப்பதமூட்டும் பண்புகள்

சருமத்தை மென்மையாக்கும் பண்புகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. இதன் கொழுப்பு அமிலங்கள் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. மெல்லிய தோல் கொண்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது

பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான்

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவைத் தடுக்க உதவுகிறது

ஆக்ஸிஜனேற்ற நன்மைகள்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது முதுமை எதிர்ப்புப் பண்புகளையும், இளமை மற்றும் பொலிவான சருமத்தை பராமரிக்கிறது

மேக்கப்பை நீக்க

மேக்கப்பை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் ஒரு மென்மையான மற்றும் பயனுள்ள தீர்வாகும். இது வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பைக் கூட உடனடியாக நீக்கி விடும்

மென்மையான சருமத்திற்கு

தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் சரும பிரச்சனைகளைக் குணப்படுத்தவும், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது

இயற்கையான உதடு பராமரிப்பிற்கு

தேங்காய் எண்ணெயைக் கொண்டு வெடிப்புள்ள உதடுகளை குணப்படுத்தலாம். இது உதடுகளை மென்மையாக மற்றும் மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது

சரும எரிச்சலை நீக்க

தேங்காய் எண்ணெயில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்துகிறது. இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து எரிச்சலைத் தடுக்க உதவுகிறது