அழகு பராமரிப்புக்கு பலரும் பலவிதமான பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் இவை இரசாயனங்கள் கலந்ததாகவும், விலை அதிகமாகவும் இருக்கக் கூடும்
வீட்டு வைத்தியம்
இந்நிலையில் சருமத்தை பொலிவாக்க பீட்ரூட்டைப் பயன்படுத்தலாம். இதில் பீட்ரூட் பவுடர் எவ்வாறு சரும பராமரிப்பில் உதவுகிறது என்பதைக் காண்போம்
சிவப்பான உதட்டிற்கு
பீட்ரூட்டைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் சிவப்பான உதட்டைப் பெறலாம். இதற்கு பீட்ரூட்டை மசித்து உதட்டிற்கு தடவுவர். ஆனால், இதை பொடியாக்கி சருமத்திற்கும் பயன்படுத்தலாம்
எப்படி செய்வது
தூய பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு அதை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குக் கொள்ளவும். பின் இதை மெல்லிய துணியில் வைத்து, நிழலில் உலர்த்தி, பின் தொடர்ந்து 2 முதல் 3 நாள்கள் காயவைத்து பொடியாக்கலாம்
தேவைக்கேற்ப பயன்படுத்துதல்
இவ்வாற் அரைத்து வைத்த பீட்ரூட் ஈரமாக இருப்பின், அதை உலர வைத்து, பின் சலித்து வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம். வெளியில் வைக்காமல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்
இளநரை பிரச்சனைக்கு
ஹேர் டை தயாரிக்கும் போது இந்த பீட்ரூட் பொடி 1 டீஸ்பூன் சேர்த்து பயன்படுத்தலாம். இது இளநரை பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது
ஃபேஸ் பேக்காக
பீட்ரூட் பவுடரை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் போது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்கலாம். இது இழந்தை சருமத்தை மீட்டுத் தர உதவுவதுடன், முக்ம இயற்கையாக சிவப்பாக மாறும்
இதையும் கவனிங்க
பீட்ரூட் பவுடரை 6 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். கால்களில் உள்ள வெடிப்பு நீங்க, கற்றாழை சாறில் பீட்ரூட் பவுடர் சேர்த்து பயன்படுத்தலாம்