தீபாவளிக்கு முகம் உடனடியா பிரகாசிக்க இத ட்ரை பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
19 Oct 2024, 08:48 IST
வாழைப்பழம் + ஓட்ஸ்
1 பழுத்த வாழைப்பழம் மற்றும் 2 தேக்கரண்டி ஓட்ஸ் பவுடர் தேவை. இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் 20-30 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சாதாரண நீரில் கழுவவும்.
தயிர் + எலுமிச்சை
2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறை ஒரு கிண்ணத்தில் நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி, குறைந்தது 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
ஒரு மசித்த தக்காளி மற்றும் 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். குறைந்தது 10 நிமிடங்களாவது வைத்திருந்து சாதாரண நீரில் கழுவவும்.
அலோ வேரா ஜெல் + எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவவும். குறைந்தது 15 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் கழுவவும்.
உளுந்து மாவு + எலுமிச்சை சாறு + மஞ்சள்
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் சாதாரண நீரில் கழுவவும்