கொளுத்துற வெயிலில் ஏற்படும் சன் பர்ன், சரும எரிச்சல் தீர செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் என்னென்னவென்று இங்கே காண்போம்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் வெயிலில் எரிந்த சருமத்தை அமைதிப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை குளிர்வித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் வீக்கத்தைக் குறைக்கிறது.
தேன்
தேன் இயற்கையாகவே ஈரப்பதம், அழற்சி எதிர்ப்பு மற்றும் வெயிலில் எரிந்த சருமத்தை ஆற்ற உதவுகிறது. வெயிலால் பாதிக்கப்பட்ட இடத்தில் தேனை ஒரு மெல்லிய அடுக்கில் தடவி, 15-30 நிமிடங்கள் ஊற விடவும்.
நீரேற்றத்துடன் இருங்கள்
ஆரோக்கியமான சருமத்திற்கு நீரேற்றமாக இருப்பது அவசியம். வெயிலுக்குப் பிறகு உங்கள் தோல் சேதமடையும் போது தண்ணீர் மிகவும் அவசியமாகிறது.
ஆப்பிள் சிடார் வினிகர்
சருமத்தில் உள்ள PH அளவை பராமரிக்க ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்த தேர்வாக இருக்கும். ஆப்பிள் சிடார் வினிகரை அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். அது சரும எரிச்சலைத் தீர்க்கிறது.
வெள்ளரிக்காய்
கண்களில் கீழ் உள்ள கருவளையங்களை நீக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. மேலும் இது வெயிலினால் ஏற்படும் எரிச்சலை போக்க உதவுகிறது.
தயிர்
சருமத்தை மென்மையாக்க தயிர் உதவுகிறது. வெயிலினால் ஏற்படும் எரிச்சலை போக்க தயிர் சிறப்பாக செயல்படுகிறது.