கோடை வெயில், மாசு உள்ளிட்டவை காரணமாக பலரும் பருக்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதிலிருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வழிகளை பார்க்கலாம்.
ஜாதிக்காயை பாலுடன் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து, பின்னர் இந்த பேஸ்ட்டை பருக்கள் மீது மட்டும் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்யலாம்.
ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
பருக்கள் பிரச்சனையை போக்க கருமிளகு பேஸ்ட்டை பாலுடன் சேர்த்து தடவலாம். பருக்கள் மீது 10 நிமிடம் தடவி, பின்னர் சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
இந்த பேஸ்ட்டை பருக்கள் மீது மட்டும் தடவவும். இந்த ஆயுர்வேத முறைகள் பருக்கள் நீக்க பெரும் உதவியாக இருக்கும்.