வயதாகும்போது, சருமம் இயற்கையாகவே முதுமை அறிகுறிகளைக் காட்டுவது பொதுவானது. இது வளர்ச்சியின் ஒரு இயல்பான பகுதியாகும். ஆனால் சரியான ஈரப்பதமாக்குதல், சூரிய ஒளி பாதுகாப்பு போன்ற ஆரம்பகால பராமரிப்பு மூலம் இது இளமையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும்
தேங்காய் எண்ணெய்
இது வறட்சியைத் தடுக்கும் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். குறிப்பாக, இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சுருக்கங்களைக் குறைக்கிறது
ஆர்கான் எண்ணெய்
இதில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்கிறது
மாதுளை விதை எண்ணெய்
இந்த எண்ணெய் வயதான எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்ததாகும். இவை செல் மீளுருவாக்கத்தை ஆதரிக்கிறது. மேலும் சுருக்கங்களின் ஆழத்தைக் குறைக்கிறது
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், சுருக்கங்களை மென்மையாக்கவும் உதவுகிறது
ஜோஜோபா எண்ணெய்
இயற்கையான சருமத்தைப் பிரதிபலிக்கவும், சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முதுமை அறிகுறிகளின் தோற்றஹ்தைக் குறைப்பதற்கு இந்த எண்ணெய் நன்மை பயக்கும்
குறிப்பு
வயதாவதைத் தடுக்கக்கூடிய சருமப் பராமரிப்பு சிக்கலானதாக இருக்காது. எனவே சரும வகையை அறிந்து, அதற்கு ஏற்ப முக எண்ணெயைத் தேர்வு செய்யலாம். மேலும், சரியான ஊட்டச்சத்துடன் சருமம் பளபளப்பாகவும், மீள்தன்மையுடனும் இருக்கும்