அழகு சார்ந்த பராமரிப்பில் ஆமணக்கு எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். இதில் அழகு பராமரிப்பில் விளக்கெண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்
கரும்புள்ளிகளை நீக்க
ஆமணக்கு எண்ணெயில் நிறைந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கரும்புள்ளிகளை நீக்கவும், தோல்களின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
சுருக்கங்களைக் குறைக்க
ஆமணக்கு எண்ணெய் சருமத்தை நீரேற்றமடையச் செய்யும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்க உதவுகிறது
புருவ வளர்ச்சிக்கு
புருவம் உட்பட முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விளக்கெண்ணெய் உதவுகிறது. தினமும் சுமார் 30 நிமிடங்கள் புருவங்களில் ஆமணக்கு எண்ணெயை மசாஜ் செய்யலாம்
ஈரப்பதமாக்க
ஆமணக்கு எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக உதவுகிறது. இது வறண்ட சருமம், உதடு மற்றும் முடி பிரச்சனைக்கு உதவுகிறது
முடி வளர்ச்சிக்கு
ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், தலைமுடிக்கு பளபளப்பையும் சேர்க்கவும் உதவுகிறது. இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவலாம்
நகங்களின் ஆரோக்கியத்திற்கு
ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது உடையக்கூடிய நகங்களை குணப்படுத்த உதவுகிறது