உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பின், அது கீல்வாதம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும், நாம் செய்யும் சில பழக்க வழக்கங்கள் யூரிக் அமிலத்தை அறியாமலேயே அதிகரிக்கலாம். இதில் நாம் தவிர்க்க வேண்டிய யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் தினசரி பழக்கங்களைக் காணலாம்
குறைந்த நீர் உட்கொள்வது
உடலில் நீரிழப்பு காரணமாக யூரிக் அமில வெளியேற்றம் குறைகிறது. இது இரத்த ஓட்டத்தில் உள்ள யூரிக் அமில அளவை அதிகரிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு போதுமான தண்ணீர் குடிப்பதை முயற்சிக்க வேண்டும்
அதிக சர்க்கரை பானங்கள் குடிப்பது
பழச்சாறுகள் மற்றும் சோடாக்கள் போன்ற சர்க்கரை பானங்களில் அதிக பிரக்டோஸ் அளவுகள் உள்ளது. இந்த அதிகளவிலான பிரக்டோஸ் யூரிக் அமில உற்பத்தியைத் தூண்டுகிறது
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்
வறுத்த பொருட்கள், துரித கள், பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் போன்றவற்றில் அதிகளவிலான கெட்ட கொழுப்புகள் மற்றும் சேர்க்கைகள் உள்ளது. இவை அனைத்துமே யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கிறது
உட்கார்ந்த வாழ்க்கை முறை
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையானது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. மெதுவான வளர்சிதை மாற்றம் மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுமே அதிக யூரிக் அமில அளவுக்கு காரணமாகும்
அதிக சிவப்பிறைச்சி உட்கொள்ளல்
சிவப்பு இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளில் அதிகளவிலான பியூரின்கள் உள்ளது. இது யூரிக் அமில அளவை அதிகரிக்கக் கூடும். இதனால், கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது
அதிகளவிலான மது அருந்துதல்
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, சிறுநீரக செயல்பாட்டை சீர்குலைக்கிறது. இது உடலில் அதிகளவு யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கிறது
குறிப்பு
சில வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன், யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதன் மூலம் கீல்வாதம் அல்லது சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும், மூட்டு ஆரோக்கியம், யூரிக் அமில கட்டுப்பாடு மற்றும் இன்னும் சில தகவல்களுக்கு மருத்துவரை அணுகி பயன்பெறலாம்