ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காக்கும் கல்லீரலை பாதுகாப்பாக வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக நீங்கள் குடிக்க வேண்டிய பானங்கள் இங்கே.
கேரட் ஜூஸ்
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கேரட் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரலின் நச்சுகளை நீக்குகிறது.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் சாறு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கல்லீரல் நலனுக்கு இது வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் சிறுநீர் பாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும். உடலில் உள்ள கொழுப்பை எரிக்க கிரீன் டீ மிகவும் உதவுகிறது.
இஞ்சி மற்றும் எலுமிச்சை
இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர் கல்லீரல் நச்சுத்தன்மைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மஞ்சள் டீ
மஞ்சளில் குறுக்குமின் உள்ளது. நம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி மஞ்சள் டீ குடித்து வரலாம்.
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.