நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

By Gowthami Subramani
20 Jun 2024, 17:30 IST

தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய என்பதை நாம் அறிவோம். எனினும் நீரேற்றமாக இருக்க மட்டுமல்லாமல் உடல் சரியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியா வழியை அறிந்திருக்க வேண்டும்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது

பொதுவாக பலரும் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர். ஆனால் இது சரியான வழியா? இல்லையா? என்பதை யோசித்ததுண்டா? ஆம் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்

பதற்றமான நிலை

நிற்கும்போது, உடலும் திசுக்களும் பதற்றமான நிலையில் இருக்கும். இந்நிலையில், நீர் அருந்துவது உடலில் நீர் வேகமாகப் பாய்வதற்கு வழிவகுக்கிறது. இதனால், தற்போதுள்ள திரவங்களின் சமநிலையில் இடையூறு ஏற்படலாம்

அஜீரணம்

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனையை சீர்குலைக்கும். இதற்கு நின்று தண்ணீர் குடிக்கும் போது அது உணவுக் கால்வாயின் வழியாக அதிக சக்தியுடனும், வேகத்துடனும் சென்று நேரடியாக கீழ் வயிற்றில் விழுவதே ஆகும். இது பாதிப்பை ஏற்படுத்தும்

மூட்டு வலி

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது, நரம்புகள் பதற்றத்தில் காணப்படும். இது உடலில் திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து நச்சுக்கள் மற்றும் அஜீரணத்தை அதிகரிக்கிறது. இது மூட்டு வலியைத் தூண்டுவதாக அமைகிறது

சிறுநீரக பிரச்சனை

உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகங்கள் நன்றாக வடிகட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், நின்று கொண்டு குடிக்கும் போது திரவமானது அதிக அழுத்தத்தின் கீழ் ஒருவரின் கீழ் வயிற்றில் வடிகட்டப்படாமல் செல்கிறது. இது சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தலாம்

நுரையீரல் பிரச்சனை

இந்நிலையில் தண்ணீர் குடிக்கும் போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சென்றடையாது. மேலும் தண்ணீர் வேகமாக செல்வது நுரையீரல் மற்றும் இதய செயல்பாட்டைப் பாதிக்கிறது

எது சரியான வழி?

நாற்காலியில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி வைத்து தண்ணீர் குடிப்பதே சரியான வழியாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் மூளையை அடைந்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் வீக்கம், செரிமானப் பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபடலாம்