இரவில் பிரா அணிந்து தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் இரவு தூங்கும் போது பிரா அணிவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காணலாம்
பல பெண்கள் இரவில் ப்ரா அணிந்து தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. ஆனால், இந்த பழக்கம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்
தடிப்புகள்
இறுக்கமான ப்ரா அணிந்து தூங்குவது சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக சருமம் கருப்பாகலாம்
இரத்த ஓட்டத்தில் பாதிப்பு
இறுக்கமான ப்ராக்கள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்துகிறது
தூக்கமின்மை
இரவு தூங்கும் சமயத்தில் இறுக்கமான பிரா அணிவதால் தூக்கத்தை அதிகளவு பாதிக்கிறது
ஒவ்வாமை
நாள் முழுவதும் ப்ரா அணிவதன் காரணமாக மார்பகங்களைச் சுற்றி வியர்வை தேங்குகிறது. இது ஒவ்வாமை அல்லது பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்துகிறது
மார்பக புற்றுநோய்
தொடர்ந்து இரவில் ப்ரா அணிந்து தூங்குவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனினும், இது குறித்த ஆராய்ச்சி மேலும் தேவைப்படுகிறது
நன்மைகள்
இரவில் பிரா அணியாமல் உறங்குவதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதுடன் தசைகளுக்கும் நிவாரணம் தருகிறது. எனவே மார்பகங்களை ஆரோக்கியமாக வைக்க, தூங்கும் போது வசதியான ஆடை அணிவது அவசியம்