இரவில் நேரம் கழித்து இரவு உணவு உட்கொள்வது தூக்கத்தைப் பாதிக்கும். இது தவிர வேறு சில உடல் பிரச்சனைகளையும் சந்திக்கும் அபாயம் ஏற்படலாம். இதில் இரவில் ஏன் நேரம் கழித்து சாப்பிடக் கூடாது என்பதற்கான காரணங்களைக் காணலாம்
எடை அதிகரிப்பு
படுக்கைக்கு முன்னதாக அதிக உணவு அல்லது இரவில் தாமதமாக உணவு உண்பது போன்றவை எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இது பிஎம்ஐ அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்
இரத்த சர்க்கரை
இரவில் தாமதமாக சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. இது காலையில் பசியின்மையை அதிகரிக்கும் மற்றும் சோர்வை ஏற்படுத்தும்
செரிமான பாதிப்பு
இரவு தாமதமாக உண்ணுவது அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கிறது
தூக்கமின்மை
உறங்கும் நேரத்திற்கு முன்பாக மிக அருகில் சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தைப் பாதித்து, தூக்கமின்மை ஏற்படுத்துகிறது
வளர்ச்சிதை மாற்ற பாதிப்பு
உடல் தூக்கத்திற்கு தயாராகும் போது வளர்சிதை மாற்றம் குறையும். இதற்கு கூடுதல் கலோரிகள் தேவையில்லை. மேலும் உண்ணும் உணவின் சக்தியை எரிக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இல்லாவிடில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது
இரத்த அழுத்தம்
இரவு தாமதமாக உணவு உட்கொள்வது இரத்த அழுத்தத்தைப் பாதிக்கும். எனவே இந்த நேரத்தில் ஓய்வெடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்