மெதுவான வளர்ச்சிதை மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

By Gowthami Subramani
14 Feb 2025, 21:10 IST

மெதுவான வளர்சிதை மாற்றம்

உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறையே வளர்சிதை மாற்றம் ஆகும். பொதுவாக மெதுவான வளர்சிதை மாற்றத்தில் உடலால் உணவை ஆற்றலாக மாற்றுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்

அறிகுறிகள்

மெதுவான வளர்சிதை மாற்றத்தால் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இதற்கு உணவுப்பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவையே காரணமாகும். இதில் மெதுவான வளர்சிதை மாற்றத்தின் சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம்

குறைந்த ஆற்றல்

மெதுவான வளர்சிதை மாற்றத்தின் காரணமாக நாள் முழுவதும் சோர்வு நீடிக்கலாம். உடலால் உணவை சரியாக ஜீரணித்து, அதை சக்தியாக மாற்ற முடியாத போது ஒருவருக்கு அன்றாட வேலைகளைச் செய்ய விருப்பமிருக்காது. இது நாள் முழுவதும் தூக்கத்தை ஏற்படுத்தலாம்

எடை அதிகரிப்பு

மெதுவான வளர்சிதை மாற்றத்தின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு அமைகிறது. மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக குறைவான கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம்

மோசமான செரிமானம்

உணவை உடைக்கும் செயல்பாட்டில் செரிமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வளர்ச்சிதை மாற்ற விகிதம் உணவை ஆற்றலாக மாற்றுகிறது. ஆனால் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தால் மலச்சிக்கல், வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அசாதாரண செரிமான அறிகுறிகள் தோன்றலாம்

அதிகரித்த பசி

மெதுவான வளர்ச்சிதை மாற்றம் உள்ளவர்கள் தொடர்ந்து சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை விரும்புவர். இது மெதுவான வளர்சிதை மாற்ற விகிதத்தின் அறிகுறியைக் குறிக்கிறது

மனநிலை மாற்றங்கள்

எப்போதும் மனநிலை மாற்றங்களை அனுபவிப்பது மெதுவான வளர்சிதை மாற்றத்தின் வலுவான அறிகுறியைக் குறிக்கிறது. இதன் காரணமாக உடலில் ஆற்றல் அளவுகள் குறைந்து எரிச்சல் மற்றும் விரக்தி போன்றவை ஏற்படலாம்

தூக்கமின்மை

தூக்கமின்மையால், உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கத் தொடங்கலாம். இது வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்குவதுடன், எடை அதிகரிப்பு பிரச்சனையை அதிகரிக்கலாம்