யாரெல்லாம் நீச்சல் அடிக்க கூடாது தெரியுமா?

By Devaki Jeganathan
10 Jul 2024, 10:31 IST

நீச்சல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நீச்சல் உதவுகிறது. இருப்பினும், சிலர் நீச்சலினால் பல தீமைகளையும் சந்திக்கின்றனர். யாரெல்லாம் நீந்தக்கூடாது என தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்த நோயாளி

நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், நீச்சல் செல்ல வேண்டாம். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக நீந்தும்போது மயக்கம் ஏற்படலாம். இந்நிலையில், மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தோல் பிரச்சினை

உங்களுக்கு தோல் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் நீச்சலைத் தவிர்க்க வேண்டும். நீச்சல் அடிக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

அறுவை சிகிச்சைக்கு பின்

நீங்கள் அறுவை சிகிச்சை செய்திருந்தால், நீங்கள் நீந்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், தையல்களில் தண்ணீர் செல்வதால் காயம் தீவிரமடையும்.

காது தொற்று

காது தொற்று இருந்தால் நீச்சல் அடிக்க வேண்டாம். பூல் தண்ணீர் காது தொற்றுகளை அதிகரிக்கிறது.

கண் தொற்று

கண் தொற்று உள்ளவர்கள் நீச்சல் அடிப்பதை தவிர்க்க வேண்டும். நீச்சல் அடிப்பதால் கண் தொற்று அதிகரிக்கிறது.