இரவில் நல்ல தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள் சரியான தூக்க நிலையைக் கொண்டிருப்பது முக்கியமாகும். இந்த ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் பலருக்கும் சரியான தூக்க நிலை பற்றி தெரியாது. இதில் நல்ல தூக்கம் பெற எந்த நிலையில் தூங்கலாம் என்பதைக் காணலாம்
தவறான தூக்க நிலை
தூங்கும் போது வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் தூங்குவது கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது வலியை ஏற்படுத்துவதுடன், தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கலாம்
சரியான தூக்க நிலை
நல்ல தூக்கத்தைப் பெறவும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இடது பக்கமாக தூங்குவது சிறந்தது. ஏனெனில் இது கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு நிவாரணம் தருகிறது. இதில் இடது பக்கத்தில் தூங்குவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்
குறட்டையைத் தவிர்க்க
அறிக்கையில் இடது பக்கம் தூங்குவதன் மூலம் குறட்டை பிரச்சனையை பெருமளவில் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது
அசிடிட்டியிலிருந்து விடுபட
இரவில் நாம் உண்ணக்கூடிய சில உணவுகளால் அசிடிட்டி ஏற்பட வாய்ப்புண்டு. தூங்கும் போது இடது பக்கம் தூங்குவதன் மூலம் இந்த அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்
இதய ஆரோக்கியத்திற்கு
இதயம் இடது பக்கத்தில் இருப்பதால், இடது பக்கம் தூங்குவது இதயத்தை நோக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்
மூளை ஆரோக்கியத்திற்கு
இடது பக்கமாக தூங்குவது மூளையில் குவிந்துள்ள நச்சுக்களை அகற்றுகிறது. இது நரம்பியல் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்
குறிப்பு
இந்தத் தகவல்கள் மற்றும் கூற்றுகள் முற்றிலும் பதிவை அடிப்படையாகக் கொண்டதாகும். எனினும் மோசமான தூக்கம், தூக்கத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு நிபுணரின் ஆலோசனை பெறலாம்