ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா.? இந்த பழங்களை சாப்பிடவும்.!

By Ishvarya Gurumurthy G
16 Feb 2024, 16:33 IST

ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா? இதனை இயற்கையான முறையில் அதிகரிக்க வழி தேடுகிறீர்களா? அப்போ இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, பெர்ரி போன்றவற்றில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

மாதுளை

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள மாதுளம்பழம், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இது சிறந்த தேர்வாக இருக்கும்.

தர்பூசணி

வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது.