தைராய்டு பிரச்சனை இருந்தால் இந்த பொருட்களை சாப்பிடுங்கள்!

By Karthick M
21 Mar 2024, 01:55 IST

தைராய்டு குணமாக உணவுகள்

இன்றைய காலக்கட்டத்தில் பலர் தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதில் நிவாரணம் பெற என்ன உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஹைப்போ தைராடிசம் என்றால் என்ன?

ஹைப்போ தைராடிசம் பிரச்சனையை சில ஆரோக்கியமான உணவுகள் மூலம் முறியடிக்கலாம். தைராய்டு சுரப்பியில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படும் போது இந்த நிலை ஏற்படுகிறது.

தைராய்டு பிரச்சனையில் செலினியம்

உடலில் செலினியம் குறைபாடு ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்தும். நட்ஸ், சூரியகாந்தி விதைகள், முட்டை மற்றும் கடல் உணவுகளை உட்கொள்ளலாம்.

ஒமேகா-3

தைராய்டு பிரச்சனையை குறைக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம். இது தைராய்டு வீக்கத்தை குறைக்க உதவும்.

இரும்புச்சத்து

அஸ்வகந்தா ஹைப்போ தைராடிசத்திற்கு நிவாரணம் அளிக்கும். அதேபோல் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

பிற ஆரோக்கிய உணவுகள்

புரோபயாடிக்குகள், எல்-டைரோசின் மற்றும் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை உட்கொள்ளலாம். அதோடு கடுமையான பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.