சில உணவுகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய உணவுப் பழக்கங்களை பார்க்கலாம்.
வெங்காயம்
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சோடியம் குறைவாக உள்ள வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக உதவும்.
பூண்டு
சிறுநீரக நோயாளிகள் சமையலில் உப்புக்குப் பதிலாக பூண்டைப் பயன்படுத்த வேண்டும். பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற பூண்டு உதவுகிறது.
காலிஃப்ளவர்
காலிஃபிளவரில் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இது உங்கள் உடலில் நீர் அளவை பராமரிக்க உதவுகிறது. காலிஃபிளவரில் புரதம் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்து போராடுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது. காலை உணவாக அவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஓட்ஸ் சாப்பிடுவது மூலம் பெறலாம்.
ஆப்பிள்
ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் வராது. ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.