உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கு கல்லீரல் மிகவும் அவசியமாகும். ஆனால், சில பானங்கள் அதன் செயல்பாட்டை பாதிக்கலாம்
கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கவும், அதன் பாதிப்பைத் தவிர்க்கவும் சில பானங்களைத் தவிர்க்க வேண்டும். இதில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய பானங்கள் சிலவற்றைக் காணலாம்
எனர்ஜி பானங்கள்
காஃபின் மற்றும் இன்னும் பிற சர்க்கரை நிரம்பிய எனர்ஜி ட்ரிங்ஸ் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தலாம்
சர்க்கரை சோடாக்கள்
அதிக பிரக்டோஸ் நிறைந்த சர்க்கரை சோடாக்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு பங்களிக்கிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கலாம்
செயற்கையாக சுவையூட்டப்பட்ட சாறுகள்
பல்வேறு வகையான பழச்சாறுகளில் செயற்கை சர்க்கரைகள் சேர்க்கப்படுகிறது. இவை கல்லீரல் கொழுப்பை அதிகப்படுத்தி நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தலாம்
டயட் சோடாக்கள்
இதில் சர்க்கரை குறைவாக இருப்பினும், செயற்கை இனிப்புகள் நிறைந்ததாகும். இவை கல்லீரலின் செயல்பாட்டை மாற்றி, கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கிறது
ஆல்கஹால்
அதிகளவிலான மது அருந்துதல் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கிறது. இதன் மிதமான நுகர்வு கூட காலப்போக்கில் கல்லீரல் செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்