எந்த நோய்கள் அதிக வியர்வையை ஏற்படுத்தும்?

By Karthick M
03 Jul 2024, 23:08 IST

சில சமயங்களில் வியர்வை வருவது பொதுவானது என்றாலும் குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகளாகவும் அதிக வியர்வை ஏற்படலாம். அது குறித்து பார்க்கலாம்.

நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் காரணமாகவும் அதிக வியர்வை ஏற்படலாம். பிரச்சனை கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

நீரிழிவு நோய்

சர்க்கரை நோயினால் வியர்வை பிரச்சனை வரலாம். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அட்ரினலின் ஹார்மோன் வெளியேறத் தொடங்குகிறது. இதன் காரணமாகவும் அதிக வியர்வை ஏற்படலாம்.

அதிக மன அழுத்தம்

அதிக மன அழுத்தம் காரணமாகவும் வியர்வை பிரச்சனை வரலாம். வேறு சில மன நிலைகள் பிரச்சனையும் அதிக வியர்வையை ஏற்படுத்தும்.

தைராய்டு

தைராய்டு அதிக வியர்வையை ஏற்படுத்தும். குறிப்பாக ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால் கண்டிப்பாக வியர்வை பிரச்சனை ஏற்படலாம்.

நரம்பு மண்டல பிரச்சனை

நரம்பு மண்டல கோளாறுகளும் அதிக வியர்வையை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனை இருந்தால் நரம்பு மண்டலத்தை சரிபார்க்க வேண்டும்.

இரத்த அழுத்தம்

அதிகப்படியான இரத்த அழுத்தமும் அதிக வியர்வையை ஏற்படுத்துகிறது. அதிக வியர்வை வந்தால் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கவும்.