அயோடின் குறைபாட்டால் என்னென்ன நோய்கள் உண்டாகும்?

By Gowthami Subramani
21 Oct 2024, 16:00 IST

உடலில் அயோடின் குறைபாடு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். இதில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்பதைக் காணலாம்

ஹைப்போ தைராய்டிசம்

அயோடின் குறைபாடு தைராய்டு நோய்க்கு மிகவும் பொதுவான காரணமாகும். இதனால் கடுமையான சோர்வு, குளிர் உணர்வு, எடை அதிகரிப்பு உள்ளிட்ட ஹைப்போ தைராய்டிசம் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது

கருவுறாமை

உடலில் போதுமான அளவு அயோடின் இல்லாமல் இருப்பது கருவுறாமை பிரச்சனைக்கு வழிவகுக்கிறது

தைராய்டு புற்றுநோய்

நாள்பட்ட அயோடின் குறைபாடு தைராய்டு புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்துகிறது

கர்ப்ப கால பிரச்சனை

கர்ப்ப காலத்தில் கடுமையான அயோடின் குறைபாடு காரணமாக பிரசவம், தன்னிச்சையான கருக்கலைப்பு மற்றும் பிறவி அசாதாரணங்கள் போன்ற நிலைகளை ஏற்படுத்தலாம்

கர்ப்ப கால இரத்த அழுத்தம்

அயோடின் குறைபாட்டால் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்த அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகலாம்

நரம்பு வளர்ச்சி பாதிப்பு

குழந்தைகளில் அயோடின் குறைபாடு சராசரி நுண்ணறிவை விட குறைவாக இருப்பது போன்ற நரம்பு வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்துகிறது

வேலை உற்பத்தித் திறன் பாதிப்பு

பெரியவர்களில் அயோடின் குறைபாடு மன செயல்பாடு மற்றும் வேலை உற்பத்தித்திறனைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது