அஜீரணம் தீவிரமடையும் போது அல்சராக மாறும். சமீபகாலமாக அல்சரால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அல்சர் வருவதற்கு முன் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
செரிமான மண்டலத்தில் உள்ள குடலில் புண்கள் உருவாகின்றன. இவை இரைப்பை அழற்சி என்று அழைக்கப்படுகின்றன. இது ஆரம்பத்தில் அதிக சிக்கலை ஏற்படுத்தாது.
எச் பைலோரி பாக்டீரியா அல்சருக்கு முக்கிய காரணம். இந்த பாக்டீரியாக்கள் ஆன்ட்ரம் எனப்படும் குடலின் பகுதியை பாதிக்கின்றன. அசுத்தமான தண்ணீராலும் இந்த பாதிப்பு வரலாம்.
அடிவயிற்று வலி, குமட்டல், திடீர் எடை குறைவு, இரத்த வாந்தி, ஏப்பம், வயிற்று உப்புசம், கருப்பு நிற மலம் உள்ளிட்டவை அல்சர் அறிகுறிகளுக்கான காரணங்களாகும்.
அசுத்த உணவை தவிர்க்கவும், நேரத்திற்கு உணவு உண்ணவும், எண்ணெய் உணவை தவிர்க்கவும், புகைப்பிடித்தல் மற்றும் மதுவை தவிர்க்கவும்.