அனைவருக்கும் பிடித்தமான விஷயம் பயணம் என்றாலும், சிலர் பயணத்தின் போது வாந்திக்கு பயப்படுவார்கள். குறிப்பாக மலைப்பயணத்தின் போது. இதை தடுக்க என்ன சாப்பிடலாம் என பார்க்கலாம்.
ஏலக்காய்
1 அல்லது இரண்டு ஏலக்காய் விதைகளை மென்று சாப்பிடும் போது, அது வாந்தி உணர்வு ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. இது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தைத் தருகிறது.
இஞ்சி
பயணத்தின் போது இஞ்சி டீ, இஞ்சி மிட்டாய் சாப்பிட முயற்சி செய்யலாம். இது தவிர, ஒரு டீஸ்பூன் இஞ்சியை நசுக்கி வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இந்தக் கலவை குடித்து வர, பயணத்தின் போது வாந்தி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
வாழைப்பழம்
நீரிழப்பு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை உணர்ந்தால் வாழைப்பழம் சிறந்த சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.
நட்ஸ்
புரதம் நிரம்பிய உணவாகும். இது குமட்டலைத் தடுக்க சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இது உடலில் குறைந்த ஆற்றலை நிரப்பும் தன்மையைத் தருகிறது. எனினும், இதை குறைவான அளவில் உட்கொள்ள வேண்டும்.
தண்ணீர்
உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிக்கவும். குமட்டலை தவிர்க்க நீரை சிறிய சிப்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது நிலைமையை மோசமாக்கலாம்.