நாள் முழுவதும் சுருசுருப்பாக இருக்க காலை 7 மணிக்கு முன் இதை செய்யவும்...

By Ishvarya Gurumurthy G
30 Apr 2024, 15:30 IST

காலை 7 மணிக்கு முன் எழுந்து சில வேலைகளைச் செய்து வாழ்க்கையில் வெற்றிபெறலாம். காலை 7 மணிக்குள் செய்ய வேண்டியவை இங்கே.

பலர் காலை 5 மணிக்கு எழுந்திருக்க நினைப்பார்கள். ஆனால், தூக்கமின்மை அல்லது சோம்பல் காரணமாக அலாரத்தை வைத்துவிட்டு மீண்டும் போர்வைக்குள் தூங்கிவிடுகிறார்கள். அத்தகையவர்கள் குறைந்தது காலை 7 மணிக்கு முன்னதாக எழுந்து ஏதாவது வேலை செய்ய வேண்டும். அப்படி என்ன செய்ய வேண்டும்? இங்கே காண்போம்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இல்லை. ஆனால், காலை 7 மணிக்கு முன் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க காலை 7 மணிக்கு முன் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை தினமும் செய்வதால், உடல் நெகிழ்வாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.

சிலர் காலையில் எழுந்ததும் தொலைபேசியைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்பைப் பார்க்கிறார்கள். இருப்பினும், இதை செய்யவே கூடாது. இதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களிடம் அன்பாக பேசவும்.

யோகா மற்றும் தியானம் காலை 7 மணிக்கு முன் குறைந்தது பத்து முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் மன அமைதி கிடைக்கும். யோகா மற்றும் தியானம் நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தேவையான சக்தியை அளிக்கும்.

தினமும் காலை 7 மணிக்கு முன் நீங்கள் விரும்பும் செய்தித்தாள் அல்லது புத்தகத்தைப் படியுங்கள். இதை அதிகாலையில் படிப்பது உங்கள் எண்ணத்தையே மாற்றிவிடும்.

காலை 7 மணிக்கு முன் நல்ல ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். அதிகாலையில் காலை உணவை உண்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

நாள் முழுவதும் பிஸியாக இருப்பவர்கள் இன்று எங்கு செல்ல வேண்டும்? யாரை சந்திப்பது? என்ன செய்ய வேண்டும்? அனைத்து திட்டங்களையும் காலை 7 மணிக்கு முன் தயார் செய்ய வேண்டும். இப்படி திட்டமிட்டால் அந்த நாள் முழுவதும் எளிதாக இருக்கும்.