நல்ல குடல் ஆரோக்கியத்துக்கு தூங்கும் முன் செய்ய வேண்டியவை

By Gowthami Subramani
24 Feb 2025, 15:01 IST

குடல் ஆரோக்கியம்

நல்ல குடல் ஆரோக்கியம் என்பது செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையைக் குறிக்கிறது. இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஜீரணித்து, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தின் மூலம் செரிமானம், நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்

இரவு பழக்கங்கள்

குடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும் முன் சில விஷயங்களைக் கையாளலாம். இந்த இரவு நேர வழக்கத்தைக் கையாள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதில் படுக்கைக்கு முன் செய்ய வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்

ஆரோக்கியமான உணவு

நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்துடன், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே இரவு தூங்கும் முன் ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரி நிறைந்த உணவை உட்கொள்ளலாம்

மென்மையான நீட்சி பயிற்சி

இரவில் படுக்கைக்கு முன்னதாக மென்மையான நீட்சிகளை மேற்கொள்வது உடல் மற்றும் மனதை தளர்த்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது

மூலிகை தேநீர் குடிப்பது

இஞ்சி, மிளகுக்கீரை, கெமோமில் போன்ற மூலிகை தேநீர் வகைகளை இரவு தூங்கும் முன்னதாக அருந்துவது செரிமான அமைப்பை மேம்படுத்தி, ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கிறது. நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு இதை தினமும் உட்கொள்ளலாம்

புரோபயாடிக் எடுத்துக் கொள்வது

ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியலை மேம்படுத்தவும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கவும் புரோபயாடிக் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது

திரைகளைத் தவிர்ப்பது

படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன், மடிக்கணினிகள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். திரைகளைத் தவிர்ப்பது நீல ஒளி வெளிப்பாட்டைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் நீலநிற ஒளி உடலில் இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைத்து குடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்