மஞ்சள் காய்ச்சலா? இந்த அறிகுறிகள லேசுல விட்ராதீங்க

By Gowthami Subramani
16 May 2024, 09:00 IST

மஞ்சள் காய்ச்சல்

இது ஆடிஸ் ஏஜிப்டி கொசுவின் மூலம் பரவக்கூடிய தீவிர வைரஸ் தொற்று நோயாகும். இது மஞ்சள் ஜாக் அல்லது மஞ்சள் பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்ட ஆடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் மனிதர்களை கடித்த பிறகே மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்துகிறது

நோயின் அறிகுறிகள்

மஞ்சள் காமாலை அறிகுறிகளாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் இதற்கு மஞ்சள் காய்ச்சல் என பெயர் வந்தது. பசியின்மை, மஞ்சள் காமாலை, காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வலி போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றலாம்

கடுமையான அறிகுறிகள்

இதயம், கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இரத்தப்போக்கு கோளாறுகள், மலத்தில் இரத்தம், கண், மூக்கு, வாயில் இரத்த கசிவு போன்ற கடுமையான அறிகுறிகள் நிலை 3-ல் ஏற்படலாம்

முக்கிய காரணங்கள்

பாதிக்கப்பட்ட கொசுக்கடி காரணமாக மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் ஒருவரைக் கடித்து மூன்று முதல் ஆறு நாள்களுக்குள் வெளிப்படலாம்

மஞ்சள் காய்ச்சல் கண்டறிதல்

இதன் பொதுவான அறிகுறிகள் இருப்பதை வைத்து உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயலிழப்பை வெளிப்படுத்தலாம்

சிகிச்சை முறைகள்

கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டால் இரத்தம் மற்றும் இரத்த விளைபொருள் மாற்றுதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயலிழப்பில் டாயலிஸ் மேற்கொள்ளப்படுகிறது

தடுக்கும் முறை

மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக, தடுப்பூசி போட்டு மஞ்சள் காய்ச்சலைத் தடுப்பது நல்லது