புகை பழக்கத்தை நிறுத்த சூப்பர் டிப்ஸ்.!

By Ishvarya Gurumurthy G
11 May 2024, 08:30 IST

புகை பிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனை தடுக்க சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். படித்து பயன் பெறவும்.

புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பலர் அதற்கு அடிமையாகி, அதை விட்டுவிடவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ தவறிவிடுகிறார்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறியவும்.

பெருஞ்சீரகம்

புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த அல்லது கைவிட பெருஞ்சீரகம் மெல்லுங்கள். இதனால் சிகரெட் பிடிக்கும் ஆசை குறைவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்கும்.

முலேட்டி

முலேட்டி உட்கொள்வது சிகரெட் பிடிக்கும் விருப்பத்தை கட்டுப்படுத்த உதவும். 1 சிறிய துண்டு முலேட்டியை மெல்லவும்.

முள்ளங்கி

முள்ளங்கியை அரைத்து சாறு எடுக்கவும். இப்போது அதில் தேன் கலந்து எடுக்கவும். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம்.

தேன்

புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த தேனின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பது நன்மை பயக்கும்.

கவனத்தை திசை திருப்பவும்

புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த, உங்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். நீங்கள் புகைபிடிக்க நினைக்கும் போது, உங்கள் காதுகளை மசாஜ் செய்யலாம்.

எலுமிச்சை

தினமும் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதால் புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டால் நல்லது.

யோகா செய்யவும்

யோகா செய்வதன் மூலம் பல உடல்நல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். சர்வாங்காசனம், புஜங்காசனம், பாலாசனம், விருக்ஷாசனம் மற்றும் சேதுபந்தாசனம் ஆகியவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.